Why asknrelief

காலத்தின் போக்கில் தன் சுயத்தை, அமைதியை, சந்தோசத்தை, தனித்துவத்தை இழந்து பரிதாபத்துகுரிய ஜீவனாக கடனாக வாழ்ந்து, தனக்கு நேர்ந்த அந்த பாதிப்பால் எதிராளியையும் சீர் குழையச்செய்யும் அந்த மனிதர்களுக்கு என்னாலான ஒரு உதவி செய்யலாமென்று நினைக்கிறேன். எனவே…

எந்த ஒரு மனிதரும், எந்த மன, உளவியல், உடலியல் பிரச்சனைகளுக்கு என்னை அணுகலாம். ஜாதகப்படியோ, அவரின் கேள்விகள் மூலமாகவோ, வேறு சில பொதுவான விபரங்கள் மூலமாகவோ நான் பதிலளிக்க காத்திருக்கிறேன். தனிப்பட்ட ரகசியங்கள் ரகசியங்களாகவே வைக்கப்படும்.

கண்டிப்பாக நேரடியாக அல்ல, அல்ல ,அல்ல. தளத்தில், அலைபேசியில், மின்னஞ்சலில் மட்டுமே

ஆலோசனை நேரம் பிற்பகல் ஒரு மணிமுதல், நான்கு மணிவரை… (Daily 1.00 pm to 4.00 pm only) அதற்கு பிறகு வரும் அழைப்புகள் தவிர்க்கப்படும்.

இந்த சேவை வரும் வியாழன் (23-06-2011) முதல் செயல்படுகிறது.

மேலும் விபரம் வலைத்தளத்தில் காணலாம்.

வலைத்தளத்தில் உங்கள் வேதனைகளை, கருத்துக்களை பகிரலாம்.

Terms And Conditions
*இந்த சேவை வியபாரமில்லை. சேவை பொதுநலன் கருத்தில் மட்டுமே. *கட்டயமில்லை, தனி நபரின் விருப்பதிலேயே சேவை. *சேவை வேண்டுவோரிடம் பணம் பெறுதல் அல்லது தருதல் இல்லை.*பணமோ அல்லது பொருளோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. *தனிப்பட்ட ஒருவரின் விபரங்கள் காக்கப்படும். *குறிப்பட்ட காலம் தவிர வேறு எந்த காலத்திலும் இப்படியான சேவை வழ்ங்கப்படமாட்டாது. (Daily 1.00 pm to 4.00 pm only)*மூன்று கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கப்படும். *விபரங்கள் தேவை இருப்பின் மற்றுறொரு நாளில் பதில் கிடைக்கும். *ஒருவரே மறுமுறை கண்டிப்பாக அழைக்கக்கூடாது. அவர் தவிர்க்கப்படுவார். *மறுசுழற்சிக்கு மூன்றுமாதம் காத்திருக்கவும். *அலைபேசி அழைப்பு, தொடர்புடைய தகவல் தொடர்பு நிலையத்தையும், இயக்குனரகத்தையும் பொறுத்தது.*அழைப்பு கிடைக்கமால் போனாலும், துண்டிக்கப்பட்டாலும் அதில் சேவை தருவோர் பொறுப்பாக மாட்டார். *எந்த வித முன், பின் விளைவுகளுக்கும் சேவை தருவோர் கட்டுப்பட மாட்டார். *வேறு எந்த வகையான சட்ட, வழக்கு, விசாரணைகளுக்கும் சேவை தருவோரை நிர்பந்திக்க இயலாது. *சேவை இயக்கமும், நிறுத்துதலும் சேவைதருவோருக்கே சொந்தமானது. *துளியும் பொருத்தமில்லா, விசயங்கள் அல்லது கேள்விகள் அறவே தவிர்க்கப்படும். அழைப்பும் துண்டிக்கப்படும்.*இந்த தளத்தின் உண்மையில் ஆர்வமுளோர் தரும் அன்பளிப்பு ஏதெனும் ஒரு சேவை மையத்திற்கு திருப்பி அளிக்கப்படும்*இந்த சேவைகள் குறித்து கைப்புள்ளைகளின் சந்தேகங்களுக்கு சேவைதருவோர் பதில் சொல்லவேண்டிய கட்டாயமில்லை.

Sunday 26 June 2011

astrology- the best way of record


ஜோதிடம் என்பதை நான் இப்பொழுது மறுப்பதற்கில்லை... ஏன்?


அன்பர்களே, ஜோதிடம் தன்னை இகழ் என்று நம் மகாகவி பாரதியார் பாடிவைத்தார். அவரின் கவிதைகளின் வீச்சு அவரின் அற்புதமான அறிவு விளக்கத்தை காட்டும். அப்படியான பொழுதில் அவர் இவ்வாறு சொன்னதின் அர்த்தம், அதை தவறாக பயன்படுத்தாதே என்பதாகவே தான் இருக்கும் என்பது... என் விளக்கம். இப்பொழுது இந்த கலந்த்துரையாடல் மகாகவி பாரதியாரின் அந்த வார்த்தைகளை பற்றியல்ல.

நாம் வாழ்வின் ஒவ்வொரு கணங்களையும் இழந்து வருகிறோம். தத்துவ விசாரணைகளில் சொல்வது போல நமக்கு மூன்றே பருவம். குழந்தை, இளமை, முதுமை...

குழந்தைப்பருவமும், இளமைப்பருவமும், அநுபவங்களை தேடித்தேடி கற்றுக்கொள்ளும் காலம். முதுமையிலும் அதே தொடர்தல் அந்தோ பரிதாபம். சிலருக்கு வேகமும், அலட்சியமும் முதுமை தொடங்கும் வரை இருக்கும். அந்த நாட்களில் எது சொன்னாலும், கவனத்தில் கொள்ளாது, எல்லாம் எனக்குத்தெரியும் என்பதாக கடந்து போய், பிறகு முதுமையில் வருந்துவதில் என்ன பலன் இருக்க முடியும். 99 சதவீத மனிதர்களின் வாழ்க்கை இப்படித்தான் இருப்பதாக நான் அறிகிறேன்.

வாழ்க்கை அப்பொழுதே வாழ்ந்து எழுதி முடிக்கவேண்டிய பரிட்சைகள் கொண்டது. புரிந்தவர்கள் அப்பொழுதே வாழ்ந்து களிப்பர். வாழ்வின் எந்த நிலையிலும் வருத்தமோ, துன்பமோ வராதிருக்கும் அற்புதமான வாழ்வில் வாழ்வார்கள்.

அந்த வழியில் இந்த ஜோதிடம் தன்னை இகழ்ந்ததும் நடந்திருக்கும். ஆம் நிச்சயமாக நான் சொல்லமுடியும். காலப்போக்கில் அது உங்களை தன் பக்கம் இழுத்திருக்கும். அப்படியே நீங்கள் ஜோதிடத்தை நம்பாமல் போனால் ஜோதிடத்திற்கோ, அல்லது கிரகங்களுக்கோ ஒரு பழுதும் இல்லை. நீங்கள் பிறக்காதபொழுதும் அவை இயங்கிக்கொண்டுதான் இருந்தன. நீங்கள் இறந்து மடிந்தபிறகும் அவை இயங்கிக்கொண்டுதான் இருக்கப்போகின்றன.

அப்படி நீங்கள் ஜோதிடத்தை நம்ப நேர்ந்த ஒரு சில காரணங்களை இங்கே பகிர்ந்துகொள்ள வாருங்களேன்....

அன்பன் சுகுமார்ஜி

No comments:

Post a Comment

Thanks for your Good Heart... by Sugumarje Director of asknrelief